அரசியல்உள்நாடு

மயிலிட்டித் துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்தார் ஜனாதிபதி அநுர

மயிலிட்டித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இன்று (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மயிலிட்டித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகளுக்காக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீட்டின் கீழான அபிவிருத்திப் பணிகளை ஜனாதிபதி அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மேடை நிகழ்வுகள், மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் தலைவரின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகின.

கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கலந்துகொண்டனர், பின்பு ஜனாதிபதி உரையும் இடம்பெற்றது.

இந்நிகழ்வுகளில் பிரதி அமைச்சர்களான சுனில் வட்டஹல, உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், கடற்றொழில் அமைச்சின் செயலாளர், பிரதம செயலாளர் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

Related posts

வர்ண ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கை இன்று

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அவசர அழைப்பு.

முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தொடர்பில் உதுமாலெப்பை எம்.பி வெளியிட்ட தகவல்

editor