உலகம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீனா ஜனாதிபதியை சந்தித்தார்

பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் சீனாவுடனான உறவுகளை முன்னோக்கி கொண்டு செல்ல இந்தியா உறுதிபூண்டுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி சீ ஜின்பிங்கிடம் தெரிவித்துள்ளார்.

7 ஆண்டுகளுக்கு பின்னர், சீனாவுக்கான விஜயத்தை இந்திய பிரதமர் மேற்கொண்டுள்ளார்.

அதிக சனத் தொகையினை கொண்டு இரண்டு நாடுகளினதும் தலைவர்கள் இன்று (31) இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்காவின் அதிக வரிவிதிப்புக்கு மத்தியில் சீனா மற்றும் இந்திய ஆகிய நாடுகள் சாதகமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளன.

தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO)உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த உச்சி மாநாட்டில், ரஷ்ய ஜனாதிபதியையும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா மசகு எண்ணெய் கொள்வனவில் ஈடுபடுவதால், அமெரிக்க ஜனாதிபதியினால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவில் 50 சதவீத இறக்குமதியை விதித்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜப்பான் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா

இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் ஆரம்பியுங்கள் – ஈரான் தலைவர் அதிரடி உத்தரவு

30 பேர் பயணித்த பேருந்து மண் சரிவில் சிக்கியது – 18 பேர் பலி – சோகத்தில் மூழ்கிய இந்தியா

editor