அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க, இரண்டு தனித்தனி முறைப்பாடுகள் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

காலி முகத்திடலில் நடைபெற்ற போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கட்டுப்படுத்தத் தவறியமை தொடர்பில் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், கோட்டாபய ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அவர் ஆஜராக வேண்டிய திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இங்கிலாந்து பயணம் தொடர்பாக அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக உள்ள குற்றச்சாட்டில், வாக்குமூலம் அளிக்க சமன் ஏக்கநாயக்க, நாளை திங்கட்கிழமை (01) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

Related posts

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

editor

இறக்குமதி செய்யும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தால் டொலர் கையிருப்பு பாதிக்கப்படலாம் – அமைச்சர் வசந்த சமரசிங்க

editor

பதில் பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய

editor