உள்நாடுவிசேட செய்திகள்

‘ஏ’ தர மதிப்பீடு பெற்ற இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, குளோபல் ஃபைனான்ஸின் 2025 ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியாளர் அறிக்கை அட்டைகளில் (Global Finance’s Central Banker Report Cards 2025) உயரிய ‘ஏ’ தர மதிப்பீட்டைப் பெற்றுள்ளார்.

இந்த அங்கீகாரம் அவரை உலகின் மரியாதைக்குரிய மத்திய வங்கி ஆளுநர்களின் பட்டியலில் இடம்பெறச் செய்துள்ளது.

இலங்கை எதிர்கொண்ட கடுமையான பொருளாதார நெருக்கடியின் போது, நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதில் அவரது விதிவிலக்கான பங்களிப்பு மற்றும் மூலோபாய அறிவு ஆகியவை இந்த ‘ஏ’ தர மதிப்பீட்டிற்கு காரணமாக அமைந்துள்ளன.

1994 முதல் நடத்தப்படும் இந்த வருடாந்திர மதிப்பீடு, உலகின் சுமார் 100 முன்னணி நாடுகளின் மத்திய வங்கி ஆளுநர்களை ஆய்வு செய்கிறது.

பணவீக்கக் கட்டுப்பாடு, பொருளாதார வளர்ச்சி இலக்குகள், பண நிலைத்தன்மை, வட்டி விகித மேலாண்மை மற்றும் அரசியல் சுதந்திரம் ஆகிய துறைகளில் வெற்றியின் அடிப்படையில், ‘ஏ+’ முதல் ‘எஃப்’ வரையிலான தரங்களில் ஆளுநர்களின் செயல்பாடு மதிப்பிடப்படுகிறது.

Related posts

மதுபோதையில் வாகனம் செலுத்திய 529 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

editor

சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் பொய்யான செய்தி பற்றி பொலிஸார் அறிக்கை

தேங்காய் எண்ணெய் தொடர்பில் வெளியான அறிவிப்பு

editor