உள்நாடு

பட்டங்கள் பறப்பது மிகவும் ஆபத்தான பிரச்சினை – விமான விபத்துக்கள் குறித்து எச்சரிக்கை!

இந்த நாட்களில் பிரபலமாக இருக்கும் பட்டம் விடும் செயற்பாட்டால் ஏற்படக்கூடிய விமான விபத்துகள் குறித்து விமானப்படை எச்சரிக்கை விடுத்துள்ளது.

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை விரும்பும் பட்டம் விடும் இக்காலப்பகுதியில், ஓடுபாதைகளுக்கு அருகிலுள்ள பகுதிகளில் பட்டம் விடுவது மிகவும் ஆபத்தான செயலாகும் என விமானப்படை அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

உலகளவில் விமான விபத்துகளுக்கு ஓடுபாதைகளுக்கு அருகில் பட்டம் பறப்பது முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என்பதையும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

விமானங்கள் பறப்பதற்கு நேரடித் தடையாக பட்டம் பறப்பது இருப்பதாகவும், கட்டுநாயக்க, இரத்மலானை, ஹிங்குராக்கொட, சீனகுடா, பலாலி, கட்டுகுருந்த, கொக்கல, வவுனியா, வீரவில மற்றும் மத்தள போன்ற பகுதிகளில் ஓடுபாதைகளுக்கு அருகில் அடிக்கடி பட்டங்கள் பறப்பது மிகவும் ஆபத்தான பிரச்சினை என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

மேல் மாகாண பாடசாலைகளின் ஏனைய வகுப்புகள் தொடர்பிலான அறிவிப்பு

ஆசன எண்ணிக்கைக்கு அமைய பயணிப்பதற்கு இன்று முதல் அனுமதி

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!