உள்நாடு

இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு

இலங்கை போக்குவரத்து சபையின் பல தொழிற்சங்கங்கள் நேற்று (27) நள்ளிரவு முதல் 4 கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்தது.

தனியார் பேருந்துகளுடன் கூட்டு அட்டவணையில் இயங்கும் தீர்மானம் மற்றும் மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்னவும் அறிமுகப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த கால அட்டவணை தொடர்பில் பல சிக்கல்கள் இருப்பதாக அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அனைத்து தரப்பினரிடமும் கருத்துக்களை கேட்டறிந்த பின்னரே இந்த கூட்டு அட்டவணை தயாரிக்கும் பணி நடந்ததாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தலைவர் பி.ஏ.சந்திரபால தெரிவித்தார்.

தொழிற்சங்கத்தால் முன்வைக்கப்பட்ட பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதால் இந்த பணிப்புறக்கணிப்பு நியாயமற்றது என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இலங்கை போக்குவரத்து சபையைச் சேர்ந்த தொழிற்சங்கம் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்தாலும் கொழும்பு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயங்கத் தொடங்கிய பேருந்துகள் நேற்று நள்ளிரவு முதல் வழக்கம்போல் இயங்கத் தொடங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பேச்சாளராக பிரசாத் சிறிவர்தன

editor

தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் குழு இன்று ஜனாதிபதி மாளிகைக்கு

அனைத்து பயணிகள் விமானம் – கப்பல்கள் இலங்கைக்கு வரத் தடை