உலகம்

பாகிஸ்தானில் அடை மழை – வெள்ளம் ஏற்படும் அபாயம் – முன்னெச்சரிக்கை வழங்கிய இந்தியா

பாகிஸ்தானில் அடைமழை பெய்து வரும் சூழலில் சிந்து நதியின் கிளையான தவீ ஆற்றில் பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக மனிதாபிமான அடிப்படையில் அந்நாட்டுக்கு இந்தியா எச்சரிக்கையை விடுத்துள்ளது.

பாகிஸ்தான் ஊடக வட்டாரங்களின்படி, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகம், பாகிஸ்தான் அரசாங்கத்துக்கு இது குறித்துத் தெரிவித்தது.

வழக்கமாக, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் இரு நாடுகளிடையேயும் இதுபோன்ற தகவல் பரிமாற்றம் நடைபெறும்.

இருப்பினும், பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா இந்த ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.அப்போதிருந்து, ஒப்பந்தத்தின் கீழ் எந்தத் தகவல் பரிமாற்றமும் இல்லை.

இந்தச் சூழலில் தூதரகம் மூலம் எச்சரிக்கைகள் அனுப்பப்படுவது இதுவே முதல் முறை.

-ரொய்ட்டர்

Related posts

கொரோனா: தமிழகத்தில் பதிவானது முதல் மரணம்

முகக்கவசம் அணியாத பிரதமருக்கு அபராதம்

கடுகதி ரயில் விபத்தில் 36 பேர் பலி