உள்நாடுபிராந்தியம்

குளியாப்பிட்டியில் பாடசாலை வேனும், டிப்பரும் மோதி கோர விபத்து – பாடசாலை மாணவர்கள் உட்பட மூவர் பலி

குளியாப்பிட்டி, வில்பொல பாலத்திற்கு அருகில் இன்று (27) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

பாடசாலை வேன் மற்றும் டிப்பர் வாகனமும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நடந்த நேரத்தில் சம்பவ இடத்தில் இருந்த ஒருவர் விபத்து குறித்து பின்வருமாறு கருத்து தெரிவித்தார்.

நான் முச்சக்கரவண்டியில் இருந்த போது வேனும் டிப்பரும் மோதியதை பார்த்தேன்.7 அல்லது 8 பாடசாலை மாணவர்கள் அதில் இருந்தனர்.

அவர்கள் அனைவரையும் அழைத்துச் சென்று வாகனங்களில் ஏற்றினோம். வேனின் சாரதி அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

அவருடன் இரண்டு மாணவர்களும் உயிரிழந்து காணப்பட்டனர். காயமடைந்தவர்களை எங்களால் முடிந்த அளவு வாகனங்களில் ஏற்றினோம். ஒரு பிள்ளை மாத்திரம் நல்ல நிலையில் இருந்தது.” என்றார்.

Related posts

வீதியோரத்தில் இருந்த மரத்தில் மோதி பஸ் விபத்து – 14 பேர் வைத்தியசாலையில்

editor

வர்த்தகர் தினேஷ் ஷாப்டரை படுகொலை செய்துள்ளதாக நீதிமன்றம் அறிவிப்பு

கொரோனா தொற்று : மேலும் 3 பேர் பாதிப்பு