பொது சொத்து சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தற்போது கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்ற பகுதியில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் இருந்தவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.