உள்நாடு

சட்டத்தரணிகள் சங்கம் கடும் எச்சரிக்கை!

தனி ஆட்கள் மற்றும் யூடியூபர்களின் அண்மைய சமூக ஊடக கருத்துகள் மற்றும் கணிப்புகள் நீதித்துறையில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இதுபோன்ற நடவடிக்கைகள் சட்டத்தின் ஆட்சியையும் நீதி அமைப்பு மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் குறை மதிப்பிற்கு உட்படுத்தும் என்று அந்தச் சங்கம் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில், நீதித்துறையின் சுதந்திரம் வெளிப்புறத் தலையீட்டிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்று சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அத்தகைய தலையீட்டைச் செய்பவர்கள் அரசியலமைப்பின் கீழ் சட்ட விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts

ரஞ்சன் ராமநாயக்க இன்று நீதிமன்ற முன்னிலையில்

பைஸர் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி

பாண், பேக்கரி பொருட்கள் விலையில் மாற்றம் இல்லை