அரசியல்உள்நாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் உள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 29ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களைப் பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதவான் அசங்க போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, மகாவலி அதிகார சபையின் நிலத்தில் கட்டப்பட்ட தனது அரசியல் அலுவலகம் ‘அரகலய’ போராட்டக்காரர்களால் அழிக்கப்பட்டதாக கூறி இழப்பீடாக ரூ.88.5 இலட்சத்தை சட்டவிரோதமாகப் பெற்று, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. வழக்கின் அடுத்த விசாரணை 2025 ஓகஸ்ட் 29ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Related posts

வலுக்கும் கொரோனா

கோதுமை மா ரூ.35 – 45 இனால் அதிகரிப்பு

துருக்கி வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு