அரசியல்உள்நாடு

அஸ்கிரிய மகாநாயக்க தேரரை சந்தித்த ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள்

ஐக்கிய தேசியக் கட்சியினர் செவ்வாய்கிழமை (26) காலை அஸ்கிரிய மகா விகாரைக்கு விஜயம் செய்து அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரை சந்தித்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரல மற்றும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர், பிரதம தேரர் மற்றும் சிரேஷ்ட பிக்குகள் அடங்கிய குழுவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இந்தச் சந்திப்பின் போது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தற்போதைய நிலைமை குறித்தும், நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதியின் தற்போதைய உடல்நிலைக்காக அவர்கள் பிரதம தேரரிடம் ஆசிர்வாதமும் பெற்றுக் கொண்டனர்.

Related posts

மொட்டுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் ரேணுகா பெரேரா கைது

editor

ஜனாதிபதிக்கும் வியட்நாமின் ரொக்ஸ் குழுமத்தின் பிரதானிகளுக்கும் இடையிலான சந்திப்பு

editor

ஐவருக்கு மரண தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்றம்

editor