முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (26) பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கடந்த பொதுத் தேர்தலின் போது தேர்தல் சட்டங்களை மீறியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்காக அவர் இன்று ஆஜரானார்.
இதன்போது, பதுளை நீதவான் நுஜித் டி. சில்வா வழக்கு விசாரணையை 2026 ஜனவரி 6ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.