அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் கைது சரியா, தவறா ஆராய போவதில்லை நீதிமன்றம் சுயாதீனமாக செயற்பட இடமளிக்க வேண்டும் – விமல் வீரவன்ச

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியவில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டமை சரியா, தவறா என்பதை நாங்கள் ஆராய போவதில்லை.

நீதிமன்றம் சுயாதீனமாக செயற்பட இடமளிக்க வேண்டும். ஜனநாயகவாதிகளை முடக்குவதற்கு முன்னெடுக்கும் அரசியலமைப்பு சர்வாதிகார செயற்பாடுகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச அழைப்பு விடுத்தார்.

கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

பொது சொத்து துஷ்பிரயோகம் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியவில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டமை சரியா, தவறா என்பதை நாங்கள் ஆராய போவதில்லை.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார கொள்கையை தோளில் சுமந்துக் கொண்டு செல்கிறார்.சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெற்று உண்ணும் நிலைக்கு ஜனாதிபதி நாட்டை நிர்வகிக்கிறார்.

ஆளும் தரப்பினர் இழைக்கும் குற்றங்களுக்கு சட்டம் முறையாக செயற்படுத்தப்படுவதில்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாடு சிந்தனைக்கு வருவதில்லை.

பொது சொத்துக்கு முறைகேடு குற்றத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமாயின் மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிராகவே சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் நாட்டு மக்கள் அவதானம் செலுத்த வேண்டும். நீதிமன்றத்தின் செயற்பாடுகள் பற்றி நாங்கள் பேச போவதில்லை. நீதிமன்றம் சுயாதீனமாக செயற்பட இடமளிக்க வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி பயங்கரவாதிகளுக்கு உத்தேகமளித்துக் கொண்டு ஜனநாயகவாதிகளை முடக்குவதற்கு முன்னெடுக்கும் அரசியலமைப்பு சர்வாதிகார செயற்பாடுகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

-இராஜதுரை ஹஷான்

Related posts

ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு; நாட்டில் வெள்ளம் ஏற்படும் அபாயம்

இந்திய உயர் ஸ்தானிகர் இலங்கை பிரதமருடன் சந்திப்பு

editor

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தில் பதற்ற நிலை