உள்நாடுபிராந்தியம்

பேருந்து நிலையத்தில் சடலம் மீட்பு

பல்லேகலை, குண்டசாலை புதிய நகர பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத ஒருவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பேருந்து நிலையத்தில் சடலம் ஒன்று இருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகலை அடுத்து, அதனை பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் அடையாளம் காணப்படவில்லை என்பதுடன் சுமார் 70 வயது மதிக்கத்தக்கவர் என கூறப்படுகிறது.

சடலம் கண்டி தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பல்லேகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

ஈடிஐ – சுவர்மஹல் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகள் மத்திய வங்கியால் நிறுத்தம்

மகிந்த தனது நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் – பெரமுனவின் MP க்கள் எச்சரிக்கை.

தேசிய அடையாள அட்டை தொடர்பான புதிய அறிவிப்பு