உலகம்

லொறியுடன் நேருக்குநேர் மோதிய வேன் – 7 பெண்கள் உட்பட 8 பேர் பலி – 4 பேர் காயம்

பிகார் மாநிலம் பாட்னா புறநகரில் மினி வேனும், லொறியும் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் 7 பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.

பாட்னா – நாலந்தா எல்லைக்கு அருகில் உள்ள ஷாஜகான்பூரில் நேற்று (23) அதிகாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது.

விபத்தில் காயம் அடைந்த நால்வரும் அருகில் உள்ள அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திலிருந்து லொறி சாரதி தப்பி ஓடிவிட்டார். அவரை பொலிஸார் தேடுகின்றனர்.

விபத்து குறித்து முதல்வர் நிதிஷ் குமார் மிகுந்த வேதனை தெரிவித்துள்ளார்.

பிகாரில் மற்றொரு துயர சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் ஆற்றில் மூழ்கி இறந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்க விலை

editor

ஐக்கிய இராஜ்ஜியம் வரலாற்றின் புதிய அத்தியாயத்தில்

சர்ச்சையில் பரிஸ் டெஸ்கார்ட்ஸ் பல்கலைக்கழகம்