அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்வீடியோ

வீடியோ | நீதிமன்றத் தீர்ப்புகளை அரசியல் யூடியூபர்கள் முன்கூட்டியே அறிவிப்புச் செய்வது தான் முறைமையில் கொண்டு வந்த மாற்றமா? – சஜித் பிரேமதாச கேள்வி

நீதியை நிலைநாட்டும் செயற்பாடும், சட்டத்தின் ஆட்சியும் ஜனநாயக ரீதியாகவும், முறையாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும். எல்லோரும் சரியான வழிமுறையைப் பின்பற்றியொழுக தயாராக இருந்தாலும், யூடியூப் மூலம் வழங்கப்படும் நீதியின் நியாயத்தன்மை குறித்து எந்தவித ஒருமித்த கருத்தும் இல்லை.

நீதிமன்றத்தால் பெற்றுத்தரப்படும் தீர்ப்புக்கள் மற்றும் நீதியை நிலைநாட்டும் செயற்பாடுகள் தொடர்பில் பல நாட்களுக்கு முன்பே, அரசியல் கட்சி சார் யூடியூப் ஆர்வலர்கள் முன்கூட்டியே எவ்வாறு கருத்து வெளியிடுவர் என்பது குறித்து பிரச்சினை காணப்படுகின்றது. இவ்வாறான விடயமொன்று நடக்கக்கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இது நீதிமன்றத்துக்கும், நீதியை நிலைநாட்டும் செயற்பாட்டுக்கும், அரசியலமைப்புக்கும் மற்றும் உச்ச சட்டத்தையும் அவமதிக்கும் செயலாகும்.

முறைமையில் மாற்றத்தைக் கொண்டு வருவோம் எனக் கூறி இதனையா செய்துள்ளீர்கள் என கேள்வி எழுப்புகிறோம்.

அரசியலமைப்பின் சட்டங்கள் அல்லது நீதியை நிலைநாட்டும் செயற்பாட்டுப் பொறிமுறையில் காணப்படும் சட்ட ஒழுங்கு விதிகளை செயல்படுத்தும் நடவடிக்கையில் வெளிப்படைத்தன்மையும் நேர்மையும் இருக்க வேண்டும்.

நீதியை நிலைநாட்டும் செயல்பாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஒரு அரசியல் யூடியூபர் முன்கூட்டியே அறிவிப்புச் செய்ய முடியாது.

சர்வாதிகாரம் ஆட்சி செய்யும் நாட்டில் மட்டுமே இதுபோன்ற ஒரு விடயம் நடக்கும். ஆனால் நம்மைப் போல ஜனநாயகம் ஆட்சி செய்யும் நாட்டில் இதுபோன்ற ஒரு விடயம் நடக்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (24) காலை தேசிய வைத்தியசாலைக்கு சென்றார்.

பார்வையிட்டு வெளியேறும் தருணத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

ஒரு யூடியூப் சேனல், கைது செய்யப்படவிருக்கும் நபரின் பெயர், கைது செய்யப்படும் திகதி மற்றும் அவர் சிறையில் கழிக்கப்போகும் நாட்களின் எண்ணிக்கையைக் கூட முன்கூட்டியே வெளியிடுவதானது, நீதியை நிலைநாட்டும் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளவர்களை அவமதிக்கும் விதமாக அமைந்து காணப்படுகின்றது.

யூடியூப் சேனல்கள் மூலம் நீதியை நிலைநாட்டும் செயல்முறையை மேற்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இல்லை. சட்டத்தை அமுல்படுத்துவதில் சகலரையும் சமமாக நடத்துவது பிரச்சினைக்குரிய விடயமல்ல.

என்றாலும், அரசியல் யூடியூபர்கள் நீதியை நிலைநாட்டும் செயல்பாட்டில் செல்வாக்கு செலுத்துவது சட்ட ஒழுங்கு முறையில் அமைந்த விடயமொன்றல்ல என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தற்சமயம் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் ஒன்றாக இணைந்து கலந்துரையாடல்களை நடத்துவது வெறுமனே அரசியல் ஆதாயம் பெறுவதற்காகவல்ல.

நாட்டில் சுமார் 50% ஆனோர் தற்போது ஏழ்மை நிலையில் இருந்தாலும், சுமார் 75% ஆனோர் அஸ்வெசும நிவாரணத்தைக் கோரி விண்ணப்பித்துள்ளனர்.

2028 ஆம் ஆண்டுக்குள் கடனை திருப்பிச் செலுத்த வேண்டுமானால் 5% பொருளாதார வளர்ச்சி தேவை, நாட்டில் இதற்கான விடயம் நடப்பதாக இல்லை.

நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மைகள் வீழ்ச்சி கண்டுள்ளன. இவ்வாறான நிலைமைகளுக்கு மத்தியில் நாட்டின் பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கத்திடம் பிரயோக ரீதியான எந்தத் தீர்வுகளும் இல்லை.

இத்தகைய சூழ்நிலைக்கு மத்தியில் எம்மால் முன்னோக்கிச் செல்ல முடியாது. 2028 முதல், வருடாந்தம் அமெ.டொ. 5.5 பில்லியன் ரூபா கடனைச் செலுத்த வேண்டி காணப்படுகின்றது.

இதற்கான பலம் இயலுமை நமது நாட்டிடம் உள்ளதா என்று நாம் கேள்வி எழுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

இந்த அரசாங்கம் தற்போது போகும் போக்கைப் பார்த்தால், 2028 ஆம் ஆண்டுக்குள் மீண்டுமொரு புதிய வங்குரோத்து நிலை உருவாகக்கூடும் என்ற அச்சம் காணப்படுகிறது. தற்போது போகும் இந்த முறை பொருத்தமான முறையல்ல.

இந்த போக்கால் நாட்டைக் கட்டியெழுப்பும் இலக்குகளை அடைய முடியாது. இந்த பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகளைப் பெற்றுத் தருவதாக இல்லை. எதிர்க்கட்சி கூட நாட்டைக் கட்டியெழுப்பும் கருத்துகளின் அடிப்படையிலயே முன்வருகின்றன.

நாட்டைக் கட்டியெழுப்பும் கொள்கைத் தொகுப்பின் அடிப்படையில் ஒன்று சேருவோமே தவிர, அதிகாரத்தைப் பெறுவதற்கோ அல்லது பதவிகளைப் பகிர்ந்து கொள்வதற்கோ நாம் ஒன்று சேர மாட்டோம் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

வீடியோ

Related posts

இன்று கட்சித் தலைவர்கள் கூடுகின்றனர்

நாடாளுமன்றத்தை கூட்டி தீர்வு காணுமாறு வலியுறுத்தல்-பொதுநலவாய நாடுகள் அமைப்பு

“அவசர கடிதம் எழுதிய சுமந்திரன்” தமிழர்களுக்கு ஆபத்து?