சீனாவில் கட்டுமானப் பணி நடைபெற்று வந்த பாலம் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.
விபத்தில் மேலும் 04 பேர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாலம் கட்டப்பட்டபோது 16 தொழிலாளர்கள் அதில் பணிபுரிந்ததாகக் கூறப்படுகிறது.
கயிறு அறுந்ததால் பாலம் இடிந்து விழுந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தப் பாலம் 1.6 கிலோமீட்டர் நீளம் கொண்டது என்றும், அதன் தளம் ஆற்றின் மேற்பரப்பிலிருந்து 55 மீட்டர் உயரத்தில் உள்ளது என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.