உள்நாடுவிசேட செய்திகள்

இன்று அதிகாலை பொரலஸ்கமுவயில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி – ஒருவர் காயம்

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் இன்று (24) அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

இன்று அதிகாலை 12.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் மற்றொரு நபர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸையை சேர்ந்த 25 வயதான கிஹான் துலான் பெரேரா என்பவரே சம்பத்தில் உயிரிழந்தார்.

குறித்த இளைஞன் உள்ளிட்ட 09 பேர் பொரலஸ்கமுவ பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு வீதியில் நடந்து சென்றபோது, ​​முச்சக்கர வண்டியில் பிரவேசித்த ஒருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக இந்த துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில், இரு தரப்பினரும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உதய குமார வுட்லர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஈஸ்டர் தாக்குதல் ராஜபக்ஷவுக்கு விசுவாசமான இலங்கை அதிகாரிகள் உடந்தை – செனல் 4 வெளியிடப்போகும் செய்தி

பொரளை பகுதியில் கோர விபத்து – ஒருவர் பலி

editor

மகளின் முதலிரவன்று தந்தை கைது! 9வருடத்திற்கு பின் சிக்கினார்