உலகம்

நிபந்தனைகளை ஏற்காவிட்டால் காசா நகரம் அழிக்கப்படும் – ஹமாஸுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

மேற்​காசிய நாடான இஸ்​ரேலுக்​கும் பாலஸ்​தீனத்​தின் காசாவை ஆளும் ஹமாஸ் போராளிகளுக்கு இடையே இரண்​டாம் கட்ட போர் நிறுத்​தம் தொடர்​பாக பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது.

இதில் இஸ்​ரேல் விதித்த நிபந்​தனை​களை ஹமாஸ் ஏற்க மறுத்​தது.

இதையடுத்து காசா மீது இஸ்​ரேல் மீண்​டும் தாக்​குதல் நடத்தி வரு​கிறது.

இந்​நிலை​யில் இஸ்​ரேல் பாது​காப்பு அமைச்​சர் இஸ்​ரேல் காட்ஸ் நேற்று (22) எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதிவில், “போரை முடிவுக்கு கொண்டு வரு​வதற்​கான இஸ்​ரேலின் நிபந்​தனை​களை ஹமாஸ் ஏற்​கா​விட்​டால் குறிப்​பாக அனைத்து பணயக் கைதி​களை​யும் விடு​வித்​து, ஆயுதக்​குறைப்​புக்கு முன்​வ​ரா​விட்​டால் ஹமாஸின் தலைநகர​மான காசா அழிக்​கப்​படும்’’ என்று எச்​சரித்​துள்​ளார்.

காசா நகரை முற்​றுகை​யிட இஸ்​ரேல் ராணுவத்​துக்கு அனு​மதி வழங்​க​வுள்​ள​தாக இஸ்​ரேல் பிரதமர் நெதன்​யாகு நேற்று முன்​தினம் அறி​வித்ததை தொடர்ந்து பாது​காப்பு அமைச்​சர் இந்த எச்​சரிக்கையை விடுத்​துள்​ளார்.

இந்​நிலை​யில் காசா நகரை முழு​மை​யாக கைப்​பற்​றும் முயற்​சி​யில் இஸ்​ரேல் இராணுவம் ஈடு​பட்​டுள்​ளது. மக்​களை தெற்கே செல்​லு​மாறு எச்சரித்துள்ளது.

Related posts

அமெரிக்காவில் 2 இலட்சத்தை கடந்த கொரோனா மரணங்கள்

சந்திரபாபு நாயுடு யார் பக்கமோ? அவர் தான் அடுத்த இந்திய பிரதமர் | அவரின் அறிவிப்பு இன்று!

பாகிஸ்தானின் பிரதமர் ஆக பாகிஸ்தான் ஷெபாஸ் ஷெரீப் தேர்வு!