உலகம்விசேட செய்திகள்

32 வயதுடைய இலங்கை பெண் பிரித்தானியாவில் கொலை – 37 வயது இலங்கையர் கைது

பிரித்தானியாவில் இலங்கையைச் சேர்ந்த 32 வயதுடைய யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்து சம்பவம் ஆகஸ்ட் 21, வியாழக்கிழமை காலை 7:37 மணியளவில் கார்டிஃப் நகரின் சவுத் மோர்கன் பிளேஸ் (South Morgan Place) என்ற இடத்தில் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெற்கு வேல்ஸ் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

பிரித்தானியாவின் கார்டிஃப் நகரில், வீதியொன்றில் இருந்து குறித்த யுவதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவத்தையடுத்து 37 வயதுடைய இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இளைஞர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு தற்போது அவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

அமெரிக்கா : 46 ஜனாதிபதியாக ஜோ பைடன்

போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது

editor

இஸ்ரேல் ஹமாஸ் மோதல் – பிணவறைகளாக மாறி வரும் ஐஸ்கிரீம் வண்டிகள்.