உள்நாடுபிராந்தியம்

இளம் குடும்பப் பெண் ஒருவர் மரணம்

காலில் ஏற்பட்ட வீக்கத்திற்கு யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்று முன்தினம் (21) உயிரிழந்துள்ளார்.

பூநகரி – ஆலங்கேணி பகுதியைச் சேர்ந்த கௌதமன் தமிழ்நிலா (வயது 24) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

இவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் வலது காலில் வீக்கம் ஏற்பட்டு, அதற்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார்.

பின்னர் மீண்டும் வீக்கம் ஏற்பட்ட நிலையில், கடந்த 14ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் (22) உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூறு பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

-கஜிந்தன்

Related posts

முதலாவது பாராளுமன்ற தெரிவுக்குழுக் கூட்டம் இன்று

அனைத்து வகையான கிரிக்கெட்டுகளிலிருந்தும் செஹான் மதுசங்க இடைநீக்கம்

மூச்சு விடுகிறார் தானே? ஒன்றும் பிரச்சினை இல்லையே? முகத்துக்கு கொஞ்சம் தண்ணீரை தெளியுங்கள்… ‘ (VIDEO))