உள்நாடு

போலி ஆவணம் குறித்து பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகளால் வெளியிடப்பட்டதாக கூறி சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலி ஆவணம் குறித்து இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

போலியான பெயர்கள் மற்றும் கையொப்பங்களைக் கொண்ட இந்த ஆவணம், பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் நோக்கத்துடன் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆவணத்தை போலியாக தயாரித்து சமூக ஊடகங்களில் பகிர்ந்த சந்தேக நபர்களை கண்டறிய கணினி குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் இது போன்ற போலியாக பகிரப்படும் உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பொலிஸாருடன் தொடர்டைய உத்தியோகபூர்வ தகவல்கள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்களுக்கு மாத்திரமே வழங்கப்படுகின்றன என்பதை பொலிஸார் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.

Related posts

உடனடியாக எரிபொருள், மின்கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும்

சமூக ஊடக தணிக்கை – மஹிந்த கருத்து.

அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்