உலகம்

இன்று டிரேக் பாசேஜில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

தென் அமெரிக்காவின் தெற்கு முனையையும் அண்டார்டிகாவையும் இணைக்கும் டிரேக் பாசேஜில் இன்று (22) அன்று 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 10.8 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும், ஆர்ஜென்டினாவின் உஷுவாயா நகரிலிருந்து 700 கிலோமீட்டர் தொலைவில் நிகழ்ந்ததாகவும் பதிவாகியுள்ளது.

சிலியின் கடற்படை நீரியல் மற்றும் கடலியல் சேவை, சிலிய அண்டார்டிக் பிரதேசத்திற்கு சுனாமி முன்னெச்சரிக்கை விடுத்திருந்தது.

ஆனால், அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என உறுதிப்படுத்தியது.

இந்த நிலநடுக்கத்தால் உடனடி பாதிப்புகள் அல்லது உயிரிழப்புகள் குறித்து எந்த அறிக்கையும் வெளியாகவில்லை.

இருப்பினும், சிலியின் மாகல்லனேஸ் பிராந்தியத்தில் உள்ள கடற்கரை பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக மக்கள் உயரமான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

Related posts

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்தை கடந்தது

சூரியனுக்கு அருகில் சென்று ஆய்வு நடத்தக்கூடிய செய்மதி விண்ணில் ஏவப்பட்டது

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 30 இலட்சத்தை கடந்தது