அரசியல்உள்நாடு

ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தலைமையில் இடம்பெற்ற கவிதைப் படைப்புகளுடனான கலை நிகழ்ச்சி

கவிதைப் படைப்புகளுடனான கலை நிகழ்ச்சி ஒன்று நேற்றுமுன்தினம் (19) சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தலைமையில் இடம்பெற்றது.

கலாசாரம் மற்றும் சுதந்திரமான விவேகமான மனித கௌரவத்துடன் கூடிய புதிய கலாசாரத்தை அரச ஊழியர் மத்தியில் உருவாக்கும் நோக்குடன் இந்த அழகியல் கலை நிகழ்ச்சி சப்ரகமுவ மாகாண ஆளுநர் அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

மேற்படி கலை நிகழ்வில் கவிதை விமர்சனத்தை முத்த கலைஞர் ஆனந்த கொடித்துவக்குவும், பாடல்களை பிரபாத் வசந்த, சம்பத் டி சில்வா ஆகியோரும், இசை வாசிப்பை தயாபால ஹேவகே, சாமிக்க குணதிலக்க, எஸ்.எம். சாந்த மற்றும் ரொஷன் உபுல் ஆகிய கலைஞர்களும் வழங்கினர்.

மேற்படி நிகழ்வை ஏற்று நடாத்திய மூத்த கலைஞர் ஆனந்த கொடித்துவக்கு உட்பட
ஏனைய கலைஞர்களும் சப்ரகமுவ மாகாண ஆளுநரால் கெளரவிக்கப்பட்டனர்.

-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்

Related posts

பொருளாதாரக் கொள்கைகள் – திட்டச் செயற்படுத்துகை துறை அமைச்சராக மஹிந்த

ஜனாதிபதி தேர்தலுக்கு தயார் : அறிக்கை கோரும் ஜனாதிபதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையோருக்கு விளக்கமறியல்