அரசியல்உள்நாடு

கிராம மட்டத்தில் வறுமைய ஒழிக்க பெண்களை வலுவூட்டுவது அவசியம் – ஜனாதிபதி அநுர

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கான பூர்வாங்க கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று (20) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் மகளிர் பணியகம், தேசிய பெண்கள் குழு, முன் பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம், நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களம் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஆகிய நிறுவனங்களினால் 2025 வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகள் மூலம் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்தும் தனித்தனியாக ஆராயப்பட்டன.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி:

குறிப்பிட்ட நிதியாண்டிற்குள் இந்த வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகளை உரிய திட்டங்களுக்கு முறையாகப் பயன்படுத்தி, அவற்றின் நன்மைகளை மக்களுக்கு வழங்குங்கள்.

கிராமிய வறுமை ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு, பெண்களை வலுவூட்டும் வேலைத் திட்டங்களைத் தயாரிப்பது அவசியம்.

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள், மீன்பிடி, விவசாயம் மற்றும் தொழில்துறை உள்ளிட்ட அனைத்து அமைச்சுகளின் நோக்கமும் கிராமிய மக்களை வறுமையிலிருந்து விடுவிப்பதாக இருக்க வேண்டும்.

இதற்காக அரச மற்றும் தனியார் துறைகள் மட்டுமன்றி, அரச சார்பற்ற நிறுவனங்களையும் ஒருங்கிணைக்க வேண்டியுள்ளது.

இதற்காக முறையான பொறிமுறை ஒன்றைத் தயாரியுங்கள்.

சிறுவர் பராமரிப்பு மையங்களில் உள்ள பிள்ளைகள் மற்றும் பாடசாலையை விட்டு வெளியேறியவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துங்கள்.

பாடசாலைக் கல்வியை நிறைவு செய்யும் வரை, ஒரு பிள்ளை கூட கல்வியை கைவிடாமல் இருப்பதை உறுதி செய்வது சகலரதும் பொறுப்புசமூக ஊடகங்கள் மூலம் சிறுவர்களுக்கு இடம்பெறும் அழுத்தங்கள் மற்றும் துஷ்பிரயோகத்தைத் தடுக்க பரந்த பொறிமுறையை உருவாக்குவதே தற்போதைய தேவை.

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்ஷன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

-ஜனாதிபதி ஊடகப்பிரிவு

Related posts

தாழமுக்கம் 24 மணித்தியாலத்தில் வடக்கை அண்டியதாக கடக்கும்

editor

அரசியல் நெருக்கடி – பொன்சேகா பதிலடி

இன்று அதிகாலை வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு

editor