அரசியல்உள்நாடு

கண் சத்திரசிகிச்சை பிரிவின் சேவைகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை – ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன

ரம்புக்கனை வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சை பிரிவின் சேவைகளை பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள மற்றும் திறமையான முறையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சப்பிரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தெரிவித்தார்.

ரம்புக்கனை வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சை பிரிவை அபிவிருத்தி செய்வது குறித்து நேற்றைய தினம் (19)
சப்பிரகமுவ மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

மாகாண ஆளுநர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

ரம்புக்கனை வைத்தியசாலையின் வளப் பற்றாக்குறை உட்பட ஏனைய தேவையில்லை விரைவில் தீர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

மூத்த பிரஜைகளின் கண் சம்பந்தமான நோய் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக ‘சுவ தேச’ எனும் வேலைத்திட்டம் சப்ரகமுவ மாகாணத்தில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்தில் 14 வைத்தியசாலைகளில் இவ்வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

அதில் மூன்று வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்படுள்ளன.

கண் சத்திரசிகிச்சைகளுக்காக பரிந்துரைக்கப்பட்ட நோயாளர்களின் காத்திருப்புப் பட்டியலிலுள்ள நெரிசலைக் குறைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

இந்த வேலைத்திட்டத்துடன், ரம்புக்கனை பிராந்திய வைத்தியசாலையில் கண் சிகிச்சை பிரிவு, கண் வார்டு மற்றும் சத்திரசிகிச்சை அறைகளைக் கொண்ட முழுமையான கண் பிரிவொன்று நிறுவப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் கரவனெல்ல மற்றும் மாவனெல்ல வைத்தியசாலைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமந்த ரணசிங்க, சப்ரகமுவ மாகாண சுகாதார அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஷமேதானி மாதரஹேவாகே, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கபில கண்ணங்கர உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்

Related posts

இலங்கையர்கள் உட்பட 55 பேர் நாடு திரும்பினர்

பல வருடங்களின் பின் மஸாஹிமாவுக்கு நீதி கிடைத்தது

editor

கழிவுக் கொள்கலன்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை