உள்நாடு

குடிநீர் போத்தல் அதிக விலைக்கு விற்பனை – வர்த்தக நிலையத்திற்கு அபராதம்

கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்று அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்பனை செய்ததற்காக 500,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தக நிலையம் 70 ரூபாய் விலை கொண்ட குடிநீர் போத்தலை 200 ரூபாவிற்கு விற்றுள்ளதுடன், இது தொடர்பான வழக்கு இன்று (20) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது அந்த வர்த்தக நிலையம் தமது தவறை ஏற்றுக்கொண்டுள்ளது.

குறித்த வர்த்தக நிலையத்தை கடந்த ஜூலை மாதம் 16 ஆம் திகதி நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, குறித்த வர்த்தக நிலையத்தின் மூலம் 70 ரூபாய் விலை கொண்ட 500 மில்லி போத்தலை 200 ரூபாவிற்கு விற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

2025.04.01 அன்று வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி உத்தரவின்படி. 500 மில்லி லீட்டர் குடிநீர் போத்தலின் அதிகபட்ச சில்லறை விலை 70 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் பிரிவுகள் 20(5) மற்றும் 68 மற்றும் 2021 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் பிரிவு 60(4A) ஆகியவற்றின் கீழ் 200க்கு விற்பனை செய்வது குற்றமாகும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Related posts

பல நாடுகளின் தூதுவர்களுடன் முக்கிய சந்திப்பு நடத்தினார் பிரதமர் ஹரிணி

editor

கடவுச்சீட்டு வழங்குவது தற்காலிகமாக நிறுத்தம்

புதிய அரசியலமைப்பு சகல சமூகங்களையும் திருப்திப்படுத்த வேண்டும் -ரிஷாட்