பின்லாந்து நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உடல் அந்நாட்டு பாராளுமன்றக் கட்டிடத்திற்குள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டின் சமூக ஜனநாயகக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் எமிலி பெல்டோனனின் (30) உடலே மேற்படி கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவர் பாராளுமன்றக் கட்டிடத்திற்குள் தற்கொலை செய்து இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.
சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பாராளுமன்றத்தின் அனைத்து அதிகாரப்பூர்வ அலுவலகங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.