அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

சம்மாந்துறை மைதானத்திற்கு மர்ஹூம் அன்வர் இஸ்மாயிலின் பெயரை சூட்ட தீர்மானம்!

சம்மாந்துறையின் மைதானமொன்றிற்கு, சம்மாந்துறை மக்களின் நன்மதிப்பைப்பெற்று, அவ்வூருக்கு அதிகம் சேவையாற்றி அம்மக்களின் மனங்களில் நீங்காத இடம்பிடித்துள்ள மர்ஹூம்.

அன்வர் இஸ்மாயிலின் பெயரை சூட்ட சம்மாந்துறை பிரதேச சபை தீர்மானித்துள்ளது.

சம்மாந்துறை பிரதேச சபையின் 05ஆவது சபையின் இரண்டாவது அமர்வு சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் தலைமையில் சபா மண்டபத்தில் நேற்று (19) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

இதன் போது, சம்மாந்துறை, ஆலையடிவட்டை பொது விளையாட்டு மைதானத்தின் பெயரை, மர்ஹூம் அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானம் என மாற்றுவதற்கான தீர்மானம், அனைத்து கௌரவ உறுப்பினர்களின் ஏகமனதான ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக தெரிவான தவிசாளர் ஐ.எல்.எம். மஹீர் தெரிவித்தார்.

Related posts

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

மேலும் 12 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்

புத்தளத்தில் வாழும் மன்னார் வாக்காளர்களுக்கு நிவாரணம் வழங்க அரச அதிபர் நடவடிக்கை