கட்டாரில் இயங்கி வரும் நேகம மஜ்லிஸ் கத்தார் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டி கடந்த வெள்ளிக்கிழமை (15) கர்ராபாவில் அமைந்துள்ள பேர்லிங் செசன் சர்வதேச பாடசாலை உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கத்தார் நாட்டுக்கான இலங்கை தூதுவர் சித்தாரா கான் அஸார்ட் கலந்து கொண்டார்.
கௌரவ அதிதியாக தொழிலதிபரும் சமூக சேவகருமான அஷ்ஷேக் A.B.M. நவாஸ் நிகழ்வில் பங்கேற்றார்.
மேலும், சிறப்பு விருந்தினராக டாக்டர், கவிக்கோ ஜின்னா ஷரீபுத்தீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிரதம அதிதி, சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுச் சின்னங்களை வழங்கி கௌரவித்தார்.
போட்டித் தொடக்கத்திற்குப் பின், பல்வேறு அணிகள் உற்சாகமாக பங்கேற்றன. இறுதிப் போட்டியில் Negame Sky Riders மற்றும் Negame Wild Hitters அணிகள் மோதின.
கடுமையான போட்டிக்குப் பின், Negame Sky Riders அணி கூடுதலாக 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டியின் சிறந்த ஆட்டக்காரராகவும் சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் Negame Sky Riders அணியின் மிஃராஜ் தெரிவுசெய்யப்பட்டார்.
சிறந்த பந்துவீச்சாளராக Fire Blades Negama அணியின் நப்ராஸ் தெரிவானார்.
இந்நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்து வெற்றிகரமாக நடத்திய நேகம மஜ்லிஸ் கத்தார் நிர்வாகத்தினருக்கு சமூகத்தினர் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.
-நப்ராஸ்