அரசியல்உள்நாடுகட்டுரைகள்

சாணக்கியன் எம்.பியின் கருத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது – கிழக்கு மாகாணம் ஓர் இனத்திற்கு மாத்திரம் சொந்தமானது அல்ல

கிழக்கு மாகாணம் தமிழர்களின் தாயகம், அது தமிழர்களுக்குச் சொந்தமானது, அதைத் தமிழர்கள் தான் ஆளவேண்டும் எனப் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் வெளியிட்டுள்ள கருத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

மிகத் தெளிவாக இன்றும் நாம் சொல்கிறோம்.

கிழக்கு மாகாணம் முஸ்லிம்களினதும் தாயகம், தமிழர்களினதும் தாயகம், சிங்கள மக்களினதும் தாயகம்.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் 42 சதவீதம் வாழுகிறோம், தமிழ் மக்கள் 40 சதவீதம் வாழுகிறார்கள், 18 சதவீதம் சிங்கள மக்கள் வாழுகிறார்கள், ஆகவே கிழக்கு மாகாணம் மூன்று இன மக்களினதும் தாயகம்.

கிழக்கு மாகாணம் ஓர் இனத்துக்குச் சொந்தமானது அல்ல,

கிழக்கில் இன நல்லுறவை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட கட்சிகள்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக அடக்குமுறைகள் இடம் பெறுகின்ற போது, குறித்த அடக்குமுறைகளுக்கு எதிராக வடக்கு, கிழக்கில் வாழுகின்ற சகல இன மக்களினதும் ஆதரவை எதிர்பார்க்கின்ற அரசியல்வாதிகள்,

குறித்த மாகாணங்கள் ஓர் இனத்திற்கு மாத்திரம் சொந்தமானது என்ற அவர்களது இன ரீதியான கருத்தை நிறுத்த வேண்டும்.

இவ்வாறான கருத்துக்கள், இனங்களுக்கிடையிலான ஒற்றுமைக்கு வழிவகுப்பதை விட, இனங்களுக்கிடையிலான பிளவையே மேலும் அதிகரிக்கச் செய்யும்.

கிழக்கு மாகாணம் தமிழர்களின் தாயகம் எனப் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் வெளியிட்டுள்ள கருத்து, இன்றைய நாட்களில் கிழக்கின் முஸ்லிம் பிரதேசங்களில் பாரிய சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி நாளைய தினம் நடைபெறவுள்ள ஹர்தாலுக்கு ஆதரவு நல்கி இருந்தும், கிழக்கின் முஸ்லிம் பிரதேசங்களில் குறித்த ஹர்த்தாலுக்கான ஆதரவு இல்லாமல் போனதற்கு,

கிழக்கு மாகாணம் தமிழர்களின் தாயகம் என்ற இன ரீதியான பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் கருத்தாடலும் ஒரு காரணம் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.

-ஹம்ஸா கலீல்

Related posts

கொவிஷீல்ட் : 27ம் திகதி நாட்டிற்கு

பிரசன்ன ரணதுங்க, ரமேஷ் பத்திரன, ரொஷான் ரணசிங்க CID யில் ஆஜராகியுள்ளனர்.

editor

மத்திய வங்கியின் ஆளுநரின் பதவிக் காலம் நீடிக்குமா?