கண்டி – முல்லைத்தீவு வீதியில் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 7 மணியளவில் ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
சிறுவர்கள் உட்பட 9 பேர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விசுவமடு பகுதியைச் சேர்ந்தவர்கள் “பட்ட” ரக மகேந்திர வாகனத்தில் கண்டியில் இடம்பெற்ற இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பின்னர் திரும்பி வரும் வழியில் ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் எதிர்த்திசையில் வந்த டிப்பர் வாகனத்தோடு மோதுண்டு மேற்குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த “பட்ட” ரக மகேந்திர வாகனத்தில் 12 பேர் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.