உள்நாடுவிசேட செய்திகள்

சுங்கத் திணைக்களத்தின் வரலாறு காணாத வருவாய்

இலங்கை சுங்கத் திணைக்களம் ஜூலை மாதத்தில், அதன் வரலாற்றிலேயே மிக உயர்ந்த மாதாந்திர வருவாயாக 235 பில்லியன் ரூபாயை ஈட்டியுள்ளதாக பணிப்பாளர் நாயகம் சுனில் நோனிஸ் தெரிவித்துள்ளார்.

புதிய சுங்கப் பதிவு மற்றும் அறிவித்தல் முறைமையின் (new customs record and notification system) அறிமுக நிகழ்வில் பேசிய நோனிஸ், ஜூலை மாத வருவாய் ஒரு வரலாற்று மைல்கல் என்று கூறினார்.

“2023ஆம் ஆண்டில், ஒரு மாதத்தில் 100 பில்லியன் ரூபாயைத் தாண்டுவது ஒரு பெரிய சாதனையாக கருதப்பட்டது. ஆனால், இன்று, நாம் 235 பில்லியன் ரூபாயை எட்டியுள்ளோம்” என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.

இந்த புதிய முறைமை, ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு வசதிகளை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், திணைக்களத்தின் செயல்திறனை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சாதனையான வருவாய்க்கு, வாகன இறக்குமதிகள் கணிசமான பங்களிப்பை வழங்கியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

எதிர்க்கட்சித் திட்டத்திற்கு தேசிய அளவிலான வேலைத்திட்டம் அவசியம் – ஐக்கிய மக்கள் சக்தி

editor

பொதுத் தேர்தலை பிற்போடுமாறு த.தே.கூ கோரிக்கை

புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் – உயர்நீதிமன்றம் CIDஇற்கு உத்தரவு

editor