உலகம்விசேட செய்திகள்

மலேஷியாவில் போதைப்பொருளுடன் இலங்கையர் கைது!

அந்நாட்டின் புக்கிட் தம்பன் பகுதியில் இரண்டு மலேஷியர்களுடன் இலங்கையர் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பினாங்கு போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பணியகத்துக்கு கிடைத்த உளவுத்துறை தகவலின் அடிப்படையில் ஒரு வீட்டில் நடத்தப்பட்ட போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை சோதனை செய்த பின்னர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஹெரோயின் உட்பட பல்வேறு வகையான போதைப்பொருட்கள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டதாக மலேஷிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை சந்தேக நபர் மற்றும் இரண்டு மலேஷிய நாட்டவர்களிடமிருந்து நான்கு சொகுசு கார்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

மூன்று சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 19 ஆம் திகதி வரை காவலில் வைக்கப்பட்டுள்ளதாக மலேஷிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

இஸ்ரேல்- ஈரான் தாக்குதலை கண்டிக்கும் அமெரிக்காவின் MP

பிரேசில் சுகாதார அமைச்சர் இராஜினாமா

பாராளுமன்றத் கலைத்த பிரான்ஸ் ஜனாதிபதி!