உள்நாடுபிராந்தியம்

நண்பியிடம் 25 பவுண் நகையை கொடுத்து ஏமாந்த பெண் உயிர்மாய்ப்பு

நண்பியிடம் 25 பவுண் நகையை கொடுத்து ஏமாந்த குடும்பப் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு – சில்லாலை பகுதியைச் சேர்ந்த 43 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்தார்.

குறித்த பெண்ணின் நண்பி ஒருவர் தனது மகனின் திருமணத்திற்கு செலவழிப்பதற்கு பணம் தேவைப்படுவதால் அடகு வைப்பதற்கு என 25 பவுண் நகையை குறித்த பெண்ணிடம் வாங்கியுள்ளார்.

இருப்பினும் அவர் அந்த நகையை திருப்பி கொடுக்காமல் தொடர்ச்சியாக குறித்த பெண்ணை ஏமாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் அண்மையில் அந்த நகையை நண்பியிடம் கேட்டுள்ளார். அவர் அந்த நகையை வழங்க மறுக்க மனவிரக்தியில் நேற்றைய தினம் (16) தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துக் கொண்டுள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

இளவாலை பொலிஸார் சாட்சிகளை நெறிப்படுத்தினர்.

-கஜிந்தன்

Related posts

கைதினை தடுக்க ரவி கருணாநாயக ரீட் மனு தாக்கல்

பிரான்ஸ் நாட்டுடனான தொடர்புகளை வலுவாக முன்னெடுத்துச்செல்ல இலங்கை ஆர்வம்

editor

சிங்கப்பூர் அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு