அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

CID க்கு அழைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார

வாக்குமூலம் ஒன்று வழங்குவதற்காக முன்னாள் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த பணமோசடி சட்டத்தின் கீழ் இந்த விசாரணை எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக கையூட்டல், ஊழல் மற்றும் வீண் விரயத்துக்கு எதிரான பிரஜைகள் அமைப்பின் தலைவர், நிதி குற்றப்புலனாய்வு பிரிவின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடளித்துள்ளார்.

மனுஷ நாணாயக்கார தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராக இருந்தபோது சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டினாரா என்பது குறித்து விசாரணை நடத்துமாறு முறைப்பாட்டாளர் கோரியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

தபால்மூல வாக்களிப்பு – விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் தற்போதைய ஆட்சியாளர்கள் தோல்வி அடைவது நிச்சயம் – லக்‌ஷ்மன் கிரியெல்ல

editor

லங்காபுர பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் ஒருவருக்கு கொரோனா