அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

புதிய பொலிஸ் மா அதிபர் ஜனாதிபதி அநுரவை சந்தித்தார்

புதிய பொலிஸ்மாஅதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, இன்று (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.

புதிய பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு ஜனாதிபதிக்கு அவர் நினைவுப் பரிசொன்றையும் வழங்கினார்.

சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய இலங்கை பொலிஸின் 37 ஆவது பொலிஸ்மா அதிபர் ஆவார். இலங்கை பொலிஸ் சேவையில் கான்ஸ்டபிள், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ஆகிய மூன்று நிலைகளையும் கடந்து பொலிஸ்மா அதிபர் பதவிக்கு தெரிவான முதலாவது பொலிஸ்மா அதிபர் இவர் என்பது குறிப்பிடத் தக்கது.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு ஜனவரி 2க்கு ஒத்திவைப்பு

பாடசாலைகளில் மூன்றாம் தவணை இன்றுடன் நிறைவு!

முஸ்லிம்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு 53 நாடுகள் அடங்கிய OIC வலியுறுத்தல்