எல்ல-வெல்லவாய பிரதான வீதியின் இராவணா எல்ல நீர்வீழ்ச்சிக்கு அருகில் முச்சக்கர வண்டியும், சொகுசு கெப் ரக வாகனமும் ஒன்றுக்கு ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த 6 பேர் காயமடைந்த நிலையில், தெமோதரை மற்றும் பண்டாரவளை வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் பதுளையைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் சம்பவம் தொடர்பில், எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.