உள்நாடுவிசேட செய்திகள்

நாட்டில் ஓரினச்சேர்க்கை ஊக்குவிப்பு குறித்து பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வெளியிட்ட தகவல்

நாட்டில் ஓரினச்சேர்க்கையை ஊக்குவிப்பதற்காக வெளிநாட்டு அமைப்புகளுடன் இணைந்து ஒரு குழுவினர் செயல்பட்டு வருவதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

சில அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களும் இதில் ஈடுபட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் நேற்று (14) நடைபெற்ற ருஹுணு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தர்ம கீர்த்தி ஸ்ரீ கலாநிதி அகுரெட்டியே நந்த நாயக்க தேரருக்கு மியன்மார் அரசாங்கத்தால் ‘அக்கமஹா பண்டிதர்’ கௌரவப் பட்டம் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட கர்தினால் இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசியலமைப்புத் திருத்தத்தில் மனித உரிமைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Related posts

மூன்று ஆளுநர்கள் இராஜினாமா

editor

வரிச்சலுகையுடன் கூடிய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பம்

இணையத்தின் ஊடாக பண மோசடி : 14 பேர் கைது