எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மற்றும் இலங்கைக்கான ஓமான் தூதர் அகமது அலி சையத் அல் ரஷீத் (Ahmed Ali Saeed Al Rashdi) ஆகியோருக்கு இடையே நேற்று (14) பிற்பகல் எரிசக்தி அமைச்சில் சந்திப்பு ஒன்று நடைபெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையே எரிசக்தி துறையில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல், பிராந்தியத்தின் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்தல், இந்தத் துறையில் புதிய போக்குகள் மற்றும் உலகளாவிய நெருக்கடிகளை ஒன்றிணைந்து தீர்க்க எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டன.
நிகழ்வில் பேசிய எரிசக்தி அமைச்சர்,
நெருங்கிய நண்பராக ஓமனுடனான உறவுகளை மிகவும் மதிப்பதாகக் கூறினார்,
மேலும் நாட்டில் கிடைக்கும் பல்வேறு முதலீட்டு வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு எரிசக்தித் துறையில் முதலீடு செய்வதில் இணையுமாறு அந்நாட்டிற்கு அழைப்பு விடுத்தார்.
நிகழ்வில் பேசிய ஓமன் தூதர் அகமது அலி சயீத் அல் ரஷீத்,
இலங்கையில் உருவாகியுள்ள சாதகமான சூழல் குறித்து தனக்குத் தெரியும் என்றும், எரிசக்தித் துறையில் முதலீடுகளில் கவனம் செலுத்தி, அது குறித்து தனது அரசாங்கத்திற்கும் தனியார் துறைக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வளர்க்க ஓமான் நம்புவதாகவும் கூறினார்.