உள்நாடு

குஷ் போதைப்பொருள் கடத்தல் சம்பவம் – ஒருவர் கைது

தாய்லாந்தில் இருந்து குளிரூட்டி சாதனத்திற்குள் மறைத்து வைத்து நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் 40 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளை கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் கைப்பற்றியுள்ளது.

பேலியகொட, நுகே வீதியில் உள்ள துறைமுக கொள்கலன் முற்றத்தில் உள்ள ஒரு கொள்கலனில் 6 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பணிப்பாளர், பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஆரியவன்ச தெரிவித்தார்.

இந்த குஷ் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக வெல்லம்பிட்டியவைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Related posts

இருநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 304 இலங்கையர்கள்

தேசிய ஷுரா சபை சஜித் பிரேமதாசவுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிப்பு

editor

தனக்கு கிடைக்கும் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான கருத்துக்களுக்கு மறுப்பு தெரிவித்தார் – ஆளுநர்