உள்நாடுபிராந்தியம்

இன்று 10 மணிநேர நீர்வெட்டு குறித்து வெளியான அறிவிப்பு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர நீர் விநியோகம் துண்டிப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையான 10 மணித்தியாலங்கள் இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நிட்டம்புவ, கந்தஹேன, மாபகொல்ல, கொங்கஸ்தெனிய, பின்னகொல்லவத்தை, கொலவத்தை, கொரக்கதெனிய, ரன்பொகுணகம, ரன்பொகுணகம வீடமைப்புத் திட்டம், படலிய, அத்தனகல்ல, பஸ்யால, ஊராபொல, திக்கந்த, மீவிட்டிகம்மன, மாஇம்புல, மாதலான, ஹக்கல்ல, அலவல, கலல்பிட்டி, எல்லமுல்ல ஆகிய பிரதேசங்களில் நீர் விநியோகம் துண்டிக்கப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருந்துவதாகவும், போதுமான தண்ணீரை முன்கூட்டியே சேமித்து வைக்குமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக் கொண்டுள்ளது.

Related posts

ஆளுநர் பதவியை இராஜினாமா செய்தார் நசீர் அஹமட்

editor

இந்தியாவுடன் இலங்கை எட்கா உடன்படிக்கை!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 185 ஆக அதிகரிப்பு