அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

சாரணர் மாநாடு குறித்து அமைச்சர் விஜித ஹேரத் வெளியிட்ட தகவல்

இலங்கை பாலைதட்சர் இயக்கம் தற்போது நாட்டில் மிகவும் வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டு வருவதாக வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இன்று (13) இலங்கை சாரணர் தலைமையகத்தில் நடைபெற்ற தெற்காசிய தேசிய சாரணர் அமைப்புகள் சங்கத்தின் தலைமை ஆணையாளர்களின் மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது, கருத்து தெரிவித்த அவர்,

”தெற்காசிய பிராந்தியத்தில் சாரணர் இயக்கத்தின் முன்னேற்றத்திற்காக இலங்கையில் இதுபோன்ற ஒரு மாநாட்டை நடத்துவது சாரணர் இயக்கத்திற்கும், நாட்டிற்கும் கௌரவமாகும் என்றும், இதன் மூலம் தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும்” என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த மாநாடு இதற்கு முன்பு மற்ற நாடுகளில் நடத்தப்பட்டுள்ளது.

ஆனால் இலங்கையில் இதுபோன்ற ஒரு மாநாடு நடத்தப்படுவது இதுவே முதல் முறை.

சாரணர் இயக்கம் மேலும் வெற்றிபெற வாழ்த்துவதோடு, பிராந்திய ஒத்துழைப்பை அதிகரிக்க இதை ஒரு தளமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்வதாகவும் மேலும் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் உலக சாரணர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டேவிட் பெர்க், இலங்கையின் தலைமை சாரணர் ஆணையாளர் சட்டத்தரணி ஜனபிரித் பெனாண்டோ, தலைவர் ரன்சிறி பெரேரா, பெண் சாரணர் சங்கத்தின் தலைமை ஆணையாளர் டொக்டர் குஷாந்த ஹேரத், ஜெதா.ஆர்.சி. பங்கிலினன், துணைத் தலைமை ஆணையாளர் எம்.எஃப்.எஸ். முஹீத், சர்வதேச ஆணையாளர் டொக்டர் அசங்க ஆரியவா மற்றும் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த பல தலைமை சாரணர் ஆணையாளர் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related posts

எரிசக்தியால் பாதுகாப்பான இலங்கைக்கு வழி வகுப்போம் – ஜனாதிபதி

முட்டை இறக்குமதி குறித்த அறிவிப்பு

சர்வதேச கடல் எல்லையில் கடத்தல் சம்பவம் – கைதான இலங்கையர்கள்.