உள்நாடுபிராந்தியம்

மாதம்பை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் உயர்தர பிரிவிற்கான புதிய மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு.

மாதம்பை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் உயர்தர பிரிவிற்கான புதிய மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (12) காலை இடம்பெற்றது.

அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் பாடசாலை அதிபர் எஸ்.எல்.அன்வர் தலைமையில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன.

உயர்தரத்தில் கற்கவுள்ள கலை மற்றும் வர்த்தக பிரிவிற்கான மாணவர்களை உள்வாங்கும் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக சிலாபம் கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஜே.பி.சீ.கெலும் ஜயலத் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திக்காக பங்காற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பழைய மாணவர் சங்கத்தினர் மற்றும் மெஸ்டா அமைப்புக்களுடன் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

-எம்.யூ.எம்.சனூன்

Related posts

சீரற்ற காலநிலை காரணமாக ரயில் சேவைகள் மட்டு

மருதமுனை கடற்கரையில் கரையொதுங்கிய டொல்பின் மீன்

editor

பங்களாதேஷில் இலங்கையருக்கு கொரோனா தொற்று உறுதி