உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

புதிய பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்

புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, புதிய பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவிடம் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவருக்கான நியமனக் கடிதத்தை வழங்கி வைத்தார்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 61E(b) பிரிவின்படி இந்தப் புதிய நியமனத்திற்கு அரசியலமைப்பு சபையின் அனுமதி பெறப்பட்டது.

Related posts

பல்கலைக்கழக புலமைப்பரிசில் வங்கிக்கணக்குகளில் வைப்பு

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக மஞ்சுள பெர்னாண்டோ!

இஸ்மாயில் ஹனியா படுகொலை மனித உரிமை மீறலாகும் ரிஷாத் பதியுதீன் MP கண்டனம்