அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சர்கள் சபையின் இரண்டாவது கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர தலைமையில் இடம்பெற்றது

ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சர்கள் சபையின் இரண்டாவது கலந்துரையாடல் நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.

கடந்த சபை அமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் மீளாய்வு, 2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை 36 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பது என்ற அரசாங்கத்தின் இலக்கை அடைவதில் எழுந்துள்ள சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்தும், அது தொடர்பான முன்மொழிவுகள் குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.

ஏற்றுமதித் துறையின் அபிவிருத்தி தொடர்பான பல அத்தியாவசிய விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியதுடன், இரத்தினக் கற்கள் மற்றும் ஆபரணத் துறையை முன்னேற்றுதல், சுங்க நடவடிக்கைகளின் செயற்திறனை மேம்படுத்த புதிய ஸ்கேன் இயந்திரத்தை நிறுவுதல், மருந்து ஏற்றுமதித் தொழில் துறை, கோழி இறைச்சி ஏற்றுமதி,தேயிலை ஏற்றுமதி அபிவிருத்தி,மசாலா ஏற்றுமதி, Export Hub எண்ணக்கரு, திருகோணமலை துறைமுக அபிவிருத்தி, ஏற்றுமதி சார் முதலீட்டு மேம்பாடு, இலத்திரனியல் ஏற்றுமதித் துறைக்கு மூலப்பொருட்களை வழங்குதல், புதிய தீர்வை வரி ஒப்பந்தங்களுக்கு செல்லுதல் மற்றும் தீர்வை வரிகள் உள்ளிட்டவை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் உபாலி பன்னிலகே, கைத்தொழில் மற்றும் தொழில் முயாற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர்
சதுரங்க அபேசிங்க, மேல் மாகாண ஆளுநர் ஹனிஃப் யூசுப், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, கைத்தொழில் அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர உட்பட தொடர்புடைய அமைச்சுகளின் செயலாளர்கள், இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் அர்ஜுன ஹேரத், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க ஆகியோருடன் இலங்கை துறைமுக அதிகார சபை, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் இலங்கை முதலீட்டுச் சபை ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

இந்தியாவில் கைதான 4 இலங்கையர்களின் விசாரணைகள் நிறைவு : பயங்கரவாதம் குறித்து ஆதாரமில்லை

சில பகுதிகளில் மின்சார விநியோகம் வழமைக்கு

editor

இன்றும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை