நொச்சியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிகவெவ சந்தியில் நேற்று (12) இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புத்தளம் – திருகோணமலை பிரதான வீதியில் புத்தளத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்று துவிச்சக்கரவண்டியை தள்ளிக்கொண்டு பாதையை கடக்க முற்பட்டவர் மீது மோதியுள்ளது.
இதில் கலத்த காயமடைந்த அந்நபர் நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சைப் பலனின்றி மரணித்துள்ளார்.
உயிரிழந்த நபர் 54 வயதுடைய நொச்சியாகம, மொரவக கந்த பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
சடலம் தற்போது நொச்சியாக வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, நொச்சியாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.