இராஜகிரிய சந்தியில் தினசரி ஏற்படும் அதிக வாகனப் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட நாவல பாலத்தின் நிருமாணப் பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக கண்டறியும் கண்காணிப்பு விஜயமொன்றை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன நேற்று (12) மேற்கொண்டார்.
கொலன்னாவை கால்வாய் வழியாக இரட்டைப் பாதைகளுடன் 600 மீட்டர் நீளத்தில் இந்த புதிய பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது 10 மீட்டர் அகலம்.
இலங்கை அரசின் உள்நாட்டு நிதி ஒதுக்கீட்டின் கீழ் 2,598 மில்லியன் ரூபாய் பெறுமதியில் இந்தப் பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
அத்துல்கோட்டை – அங்கம் பிட்டிய மற்றும் இராஜகிரிய – நாவல பாடசாலை மாவத்தை என்பவற்றை இந்தப் பாலம் இணைக்கின்றது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் தலையீட்டில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிருமாணப் பிரிவின் சேவை வழங்களில் நடைமுறைப்படுத்தப்படும் இந்தப் பாலத் திட்டத்தின் 94% மான அபிவிருத்தி பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
இதனை முன்னிட்டு கோட்டை அங்கம்பிட்டிய, நாவல பாடசாலை மாதத்தை உட்பட நுழைவாயில் அபிவிருத்தி பணிகள் இடம் பெற்று வருகின்றன.
விஜயத்தில் கலந்து கொண்ட பிரதி அமைச்சர் கடந்த அரசாங்கத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியுடன் நிறுத்தப்பட்டிருந்த இப்பாலத்தின் அபிவிருத்திப் பணிகள் இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அபிவிருத்திப் பணிகளுக்காக அவசியமான நிதி அரசாங்கத்திடம் காணப்படுகிறது.
தனி ஒரு நிறுவனமாக, நெடுஞ்சாலை அபிவிருத்திக்கு பாரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வீண் விரயம், ஊழல் போன்றவற்றை இல்லாதொழித்து பொருளாதார சுட்டிகளை அண்மித்து வருகிறது.
தேசிய கொள்முதல் செயற்பாட்டை வெளிப்படையானதாக மேற்கொள்ளும் அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கு அர்ப்பணித்து வருகிறது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது செலவை குறைப்பதுடன் வருமான வழிகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு அந்நிய செலாவணி, வெளிநாட்டு முதலீடு, அரசாங்க வருமான முன்னேற்றத்திற்கு அவசியமான பின்னணிகளை தயாரிக்கும் நோக்கில் பயணிப்பதில் அரசாங்கம் வெற்றிகண்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பயணம் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் பரிமாற்றங்களை ஏற்படுத்திச் செல்லும் மக்கள் பயணமாகும்.
இலங்கை போக்குவரத்து சபை, தனியார் பஸ் சேவை மற்றும் புகையிரத சேவை போன்றவற்றை வினைத்திறன் மிக்க தாக்குவதற்கு அவசியமான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் போது அரசாங்கத்தின் இலக்கிற்கு அடைவதற்கு அவசியமான தீர்வு நிர்வாக ரீதியாக மேற்கொள்ள வேண்டிய ஏற்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இதன் போது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மற்றும் மாகாண அபிவிருத்தி நிருமாணக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.