உள்நாடுபிராந்தியம்

நேரக் கண்காணிப்பாளர் ஒருவர் 200 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது

பொரளை மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் நேரக் கண்காணிப்பாளர் ஒருவர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனியார் பேருந்தின் அட்டவணையில் கையொப்பமிடுதல், இயக்க நேரத்தை ஒழுங்குபடுத்துதல் மற்றும் திட்டமிடப்பட்ட அனைத்து பயணங்களையும் வழங்குவதற்கு ஈடாக ஒரு பயணத்திற்கு 200 ரூபா இலஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹெய்யன்துடுவ பகுதியில் வசிக்கும் ஒரு நடத்துனர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, கடுவெல பேருந்து நிலையத்தில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Related posts

JUST NOW: நாட்டுக்கு வருகைதந்த பசில் – நடக்கப்போவதென்ன?

அமைச்சர் குமார ஜயகொடிக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையே சந்திப்பு

editor

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை